மகளிர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுக்க போகும் விஜய் - என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிவித்தா. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சி சார்பாக விரைவில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் மூலம் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், “விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறார்கள். அதற்கான பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம் போன்றவையும் சூடிபிடிக்கும். அதனால், நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சியினரது பரப்புரை, பொதுக்கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வரும் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பும் ஓரிரு நாட்களுக்குள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay membership app released coming 8th


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->