மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கவும் தயார் - நடிகை ரஞ்சனா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் நடிகையான ரஞ்சனா சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் இடையே அரசு பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை அடித்து அவர்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.

இது தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமீனில் வெளியே வந்தார். இதுகுறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: "என்னை கைது செய்ததற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

ஆனால் நடிகர் சங்கம் சார்பாக யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் ஒரு நடிகையை தவறாக பேசியதற்கு நம் தமிழகத்தில் நிறைய நடிகர், நடிகைகள் பொங்கி எழுந்ததை பார்த்துள்ளோம். என் தனிப்பட்ட விஷயத்தை நான் தட்டி கேளுங்கள் என்று சொல்லவில்லை. 

சினிமாவில் மட்டும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது என்றில்லை. நிஜ வாழ்க்கையிலும் பொது மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்க வேண்டும். நான் அந்த மாணவர்களின் உயிரை காக்கவே அடித்தேன். இதற்காக அந்த மாணவர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் கூட அதற்கும் நான் தயார். 

என் வீட்டுக்கு வந்து கூட அடித்துவிட்டு போகட்டும். இல்லாவிட்டால் அந்த பேருந்துக்கே வருகிறேன். அங்கு வந்தும் அவர்கள் அடித்துவிட்டு போகட்டும். நல்லது செய்ததற்கு எப்படி எல்லாம் அரசியலாக்க வேண்டும் என்ற நோக்கத்தை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

இந்த சிஸ்டம் மாறும் வரை நான் விட மாட்டேன். அதையும் உறுதியாக சொல்கிறேன். நான் பாஜக நிர்வாகி என்பதால் இப்படி செய்கிறார்கள். தன்னுடன் இருப்போர் மீது பொய் வழக்குகள் பாயும் என்று அண்ணாமலையே சொல்லியிருக்காரே. இது ஆரம்பம்தான். மேலும் நிறைய நடக்கும்.

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும். தமிழகத்தில் எல்லா பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை வைக்க வேண்டும். அது வரை நான் ஓய மாட்டேன். குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். விரைவில் தமிழகத்தில் கதவு, ஜன்னல்கள் மூடியபடி பேருந்துகள் இயங்கும். அதற்கான ஆரம்ப புள்ளியாக பாஜகவை சேர்ந்த நான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ranjana press meet attack school student issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->