டீக்கடைக்கு ரூ.61,000 மின் கட்டணம் விதித்த கணக்காளர் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


டீக்கடைக்கு ரூ.61,000 மின் கட்டணம் விதித்த கணக்காளர் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வசவப்பபுரம் பகுதியில் பூபதிராஜா என்பவர் டீக்கடை உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு ஒரு மாதத்திற்கு ரூ.61,000 மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

இது தொடர்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, மின் பயன்பாடு குறித்து முறையான கணக்கீடு செய்யாமல் கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, அதிகாரிகள் விசாரணை செய்ததில், 61 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கான கணக்கு அல்ல. நான்கைந்து மாதங்கள் வராமல் இருந்த கணக்கு என்று தெரிய வந்தது.

இந்த நிலையில், மின்சார பயன்பாட்டை தவறாக பதிவேற்றம் செய்த கணக்கீட்டாளர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட டீக்கடை உரிமையாளர் முறையாக கட்ட வேண்டிய மின் கட்டணம் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accountant suspend for charged Rs.61,000 to tea shop in thoothukudi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->