தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.."பின்னணியில் ஒரு பெண்".. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


வேங்கை வயல் நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேல்நிலை நீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவுகளை பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மூன்று மாதங்களுக்கு முன்பு சிபிசிஐ போலீசார் விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மூன்று மாதங்களாக சிபிசிஐடி போலீசார் 147 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 119 பேர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து இவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ஒரு நபர் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று சிறப்பு நீதிமன்றம் வேங்கைவயலைச் சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பயிற்சி காவலராக பணியாற்றிய முரளி ராஜா உட்பட மூன்று பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காவல்துறையால் அனுப்பப்பட்ட மனிதக்கழிவுகளின் ஆய்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்பதை தற்போது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்த பிறகு மனித கழிவுகளுடன் டிஎன்ஏ ஒப்பீடும், உண்மை கண்டறியும் சோதனையும் நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A woman behind the vangaivayal issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->