8ம் வகுப்பு பொதுத்தேர்வு.. தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் , எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி இந்த தேர்வினை எழுதுவதற்கு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கவும் தெரிவித்திருந்தது.

இந்த 8ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் நேரடியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியும். மேலும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை தனித்தேவர்களாக எழுதி தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் வேலைக்கு செல்வதற்கும் தகுதி பெறலாம்.

அதன்படி தனித்தேர்வுகளுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8th std public exam indual examiners hall ticket from today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->