பலாப்பழத்திற்கு வாக்களிக்காத 7 பேருக்கு அரிவாள் வெட்டு.!! ராமநாதபுரத்தில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேசசை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார்‌.

நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களிக்காத ஏழு பேரை அறிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த க.சத்திம் பகுதியில் இரு சமுதாயத்திற்கும் இடையே ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு நூற்றி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆக்கிக் கொண்டதில் ஏழு பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து நேற்று இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் மோதல் சம்பவம் கூட தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சாயல்குடி பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 people cut with sickle who did not vote for ops


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->