உயிருக்கு போராடிய நிலையில் 540 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்! - Seithipunal
Seithipunal


திருவாரூர்: கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்ற நிலையில்,  குழந்தை இல்லாமல் மனவேதனை அடைந்து வந்துள்ளனர். 

மனகஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளை அணுகியும் எந்த பலனும் அளிக்காத நிலையில், சரண்யா தனது தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

இதனை தொடர்ந்து சரண்யா கருவுற்று, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சரண்யாவிற்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. 

540 கிராம் எடையில் முறையான உருவமே இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து 100 நாட்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு சிகிச்சை அளித்தனர். 

எடை குறைந்த குழந்தை என்பதால், தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்த குழந்தையை தரமான சிகிச்சையால் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். 

மருத்துவர்கள் குழந்தைக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு, பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டி, நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் இருந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். 

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த தாய்ப்பால் வார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் குழந்தையை பெற்றோர்களிடம் மகிழ்ச்சியோடு ஒப்படைத்தார். 

நாகையில் 540 கிராம் எடை கொண்ட குழந்தையை போராடி காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்த நாகை அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

540 grams weighing born baby saved doctors


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->