சென்னை விமான நிலையத்தில் 533 கிராம் தங்கப் பசைகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக ஒப்பந்த ஊழியர் ஒருவர் செல்ல வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், விமான நிலைய ஒப்பந்த ஊழியரை நிறுத்தி சோதனை செய்தனர். 

இருப்பினும் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் இருந்ததால், முழு பரிசோதனை செய்ய முயன்றனர். அதற்கு ஒப்பந்த ஊழியர் மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதனை செய்தனர். 

அதில், அவரது உள்ளாடையில் 2 சிறிய பார்சல்களில் ரூ.28 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள் 533 கிராம் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் விமான நிலைய ஒப்பந்த ஊழியரையும், தங்கப் பசையையும் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் தங்க பசைகளை இலங்கை பயணி ஒருவர் துபாயிலிருந்து கடத்தி வந்து, அதனை சென்னை விமான நிலைய கழிவறையில் வைத்து ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து, அதனை விமான நிலையத்துக்கு வெளியே வந்து கொடுக்கும்படி கூறியது தெரியவந்தது. விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

533 gram gold seized in chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->