தேனி : மாணவியை கடத்தி பலாத்காரம்.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு ஜெயில்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கொண்டல்நகர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி பேபியம்மாள். இவர்களுடைய மகன் சுரேஷ்குமார் (33), கடந்த 2016 ஆம் ஆண்டு 17 வயது கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பெற்றோருடன் சேர்ந்து கேரளாவிற்கு கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கட்டாயப்படுத்தி கல்லூரி மாணவியை திருமணம் செய்துள்ளார். பின்பு மாணவியை சுரேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கு கேரளாவைச் சேர்ந்த உறவினர்களான ஜெயா மற்றும் அவரது கணவர் சோமன் ஆகிய இரண்டு பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்நிலையில் மாணவியை காணவில்லை என்று, அவருடைய தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சுரேஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்து பெற்றோர் மற்றும் உறவினரான ஜெயா சோமன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுரேஷ்குமார், காளிமுத்து, பேபியம்மாள் ஆகிய மூன்று பேருக்கும் தலா  20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 15,000 அபராதமும், ஜெயா, சோமன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people from the same family have been jailed for 20 years each in the case of kidnapping and raping a college girl in theni


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->