விவசாயிகளின் அவல நிலை.. 6 மாவட்டங்களில் வறட்சி! அரசாணை வெளியீடு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மழை குறைவாக பெய்த 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்களை மிதமான வேளாண் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் "கடந்த 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது குறைவான மழைப்பொழிவு இருந்த பகுதிகள் மிதமான வேளாண் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில், மணல்மேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மோகனூர், கடலாடி, திருவாடனை, ராமநாதபுரம், நயனார் கோவில், திருப்புல்லானி, ஆர்.எஸ்புரம், மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் கடையநல்லூர், கீழ்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி திருச்சுழி உள்ளிட்ட 25 வட்டங்கள் மிதமான வேளாண் வளர்ச்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் வழக்கத்தை விட மிக குறைவான மழையின் காரணமாக 33 சதவீதத்திற்கு மேற்பட்ட பயிர் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளாகும். எனவே மேற்கண்ட வட்டார பகுதியில் வறட்சி பாதித்த பதவிகளாக அறிவிக்கப்படுகிறது" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 areas in Tamilnadu are drought affected areas


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->