தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 21-ம் தேதி 484 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அவர்களில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 3 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 25 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

பின்னர் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 25 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 4-ந் தேதியான (இன்று) வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரில் 24 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு மீனவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைபடகுகளையும் அரசுடைமை ஆக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 tamilnadu fishermans released in sri langa


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->