ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு.. 236 பேர் டிஸ்மிஸ்.. தமிழக அரசு அதிரடி..!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடான முறையில் பணி நியமனம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து ஆவின் நிறுவன மேலாளர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஆவின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த முறைகேட்டில் தொடர்புடைய 26 ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலும் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஆவின் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

236 people dismissed in aavin for illegal appointment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->