தேர்தல் நேரத்தில் வெடித்த போராட்டம்.. மதுரையில் 2,000 கடைகள் அடைப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கும் தற்போது இருக்கும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை நகராட்சி வசம் இடமிருந்து ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டு ஒரு ஏக்கர் நிலமும் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 140 வணிக வளாக கடைகள் அமைந்துள்ளது. இந்தக் கடைகளை முற்றிலுமாக எடுத்துவிட்டு புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளதால் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் எதிர்ப்பை மீறி தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்படும் கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வணிகர் சங்கத்தினரும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கடைகளை அனைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 shops closed protest in Madurai usilampatti


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->