ரயில் டிக்கெட்டுகள் வாங்க ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம். அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

அந்த வகையில் தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

மேலும், எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளை மாற்ற மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் வீதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே 2000 நோட்டுகளை கொடுத்து பிற நோட்டுகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசுப் பேருந்துகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படும் என்று போக்குவரத்து கழகம் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரயில் டிக்கெட்டுகளை வாங்க ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 ruppes notes use in southern railways


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->