மின்னல் வேகத்தில் மோத வந்த தனியார் பேருந்து - பாடம் புகட்டிய இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


மின்னல் வேகத்தில் மோத வந்த தனியார் பேருந்து - பாடம் புகட்டிய இளம்பெண்.!

திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்தவர் அருண்மொழி. இவருடைய மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பாளையங்கோட்டையில் இருந்து டவுன் பகுதியில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தார். 

அப்போது, வண்ணாரப்பேட்டையில் இருந்து வந்த தனியார் பேருந்து ஒன்று அருண்மொழியின் மனைவி வந்த இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் அதிக வேகத்தில் சென்றது. இதேபோன்று இரண்டு முறை பேருந்து சென்றது. 

இதனால் அச்சமடைந்த அருண்மொழியின் மனைவி ஆவேசத்தில் பேருந்து குறுக்கே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் அதிவேகமாக வந்த தனியார் பேருந்துக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். 

விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக வேகத்தில் சென்ற தனியார் பேருந்தை பெண் ஒருவர் தனியாளாக மறைத்து காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 fine to private bus in tirunelveli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->