தர்மபுரம் ஆதினம் வழக்கு - பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்திற்கு 15 நாள் நீதிமன்ற காவல்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு உள்ளிட்ட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் குடியரசு, விக்னஷ், வினோத், ஶ்ரீநிவாஸ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 3 தனிப்படை அமைக்கப்பட்டு, வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் மும்பையில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் விரைந்துச் சென்று கைது செய்தனர்.

பின்னர் அவர் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதற்கு முன்னதாக, அகோரம் தன்மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி கனிமொழி, மார்ச் 28ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, போலீசார் அகோரத்தை மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 days judgcial custody to mayiladuthurai bjp leader akoram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->