தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவி! வீட்டில் சிக்கிய கடிதம்! - Seithipunal
Seithipunal


சென்னை, புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் முதல் தெருவை சேர்ந்தவர் மேகனா (வயது 40). இவர் மாநகராட்சியில் பணியாற்றிய வருகிறார். 

இவர், இவரது ஒரே மகள், மகன், தாத்தா, பாட்டி என அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவரது மகள் கீர்த்தனா (வயது 17)இவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் நேற்று பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய கீர்த்தனா அவரது அறைக்கு சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவரது தம்பி சென்று பார்த்துள்ளார்.

அப்போது கீர்த்தனா மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவரது தம்பி கதறி அழுது கொண்டே தாய் மேக்னாவிடம் தெரிவித்துள்ளார். 

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது மாணவி கீர்த்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில இருந்துள்ளார். 

பின்னர் இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்குள் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீர்த்தனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் கீர்த்தனா தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது வீட்டில் அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. 

அந்த கடிதத்தில் ''நான் இந்த முடிவு எடுப்பதற்கு காரணம் என்னுடைய எக்னாமிக் ஆசிரியர்'' என்று அதில் எழுதி வைத்திருந்தார். 

இதனைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் இந்த கடிதத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th student attempted suicide


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->