11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு.. தேர்வுத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதனிடையே 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நடப்பாண்டுகாண பொது தேர்வை சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதியும் தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து, மே 5ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வரும் இன்று (மார்ச் 3ம் தேதி) வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th and 12th public exam hall ticket release today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->