அரசு பள்ளி மாணவ-மாணவிகளை சிறப்பு விமானத்தில் பறக்க வைத்த உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ்.!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. 

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மேம்பாலங்களுக்கு செஸ்பலகை வடிவில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது 100 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து சிறப்பு விமானத்தில் அவர்களை சென்னையில் இருந்து பெங்களூருக்கு உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுப்பி வைத்துள்ளனர். செஸ் விளையாட்டு போட்டிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 100 மாணவர்கள் இந்த சிறப்பு பயணத்தில் கலந்துகொண்டனர்.

அவர்களது திறமையை பாராட்டும் விதமாகவும், அந்த திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாகவும் இந்த பயணத்தை பரிசாக கொடுப்பதாக உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 students flying in flight


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->