உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

இதில், முதலாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் (7-11) மாதம் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் விளையாட இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்ததும் மீதமுள்ள இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படுகின்றனர்.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் அணிக்கு 13.2 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு 6.5 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World test championship prize money


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->