மகளிர் தினம் ஸ்பெஷல்.. நாளை மகளிர் ஐபிஎல் போட்டிகளை காண  இலவச டிக்கெட்.! - Seithipunal
Seithipunal


மகளிர் தினத்தையொட்டி நாளை மகளிர் பிரிமியர் லீக் போட்டிகளை இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்த ஐபிஎல் கமிட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாளை மகளிர் பிரீமியர் லீக் போட்டியை காண இலவச அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை காண ஆண், பெண் இருபாலருக்கும் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens day special free entry ticket in WPL


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->