#IPL2022 : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 

அதனை தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 73 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் விராட் கோலி ஒரு அணிக்காக 7000 ரன்களை கடந்துள்ளார். பெங்களூரு அணிக்காக 7000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli reached 7000 runs in ipl cricket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->