அயர்லாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம்.! தேதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி தற்போது இலங்கை அணி உடன் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளில் இந்திய அணி மூன்றிலும் வெற்றி பெற்று இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளது. முதல் போட்டி வருகின்ற நான்காம் தேதி முதல் தொடங்குகிறது.

இதையடுத்து, இந்த மாதம் 26ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கி மே 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், இந்திய அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஜூன் 26ஆம் தேதி நடைபெறுகிறது. 2வது டி20 போட்டி ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு டி20 தொடரில் விளையாடுவதற்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பிறகு இந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

team india tours ireland


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->