#T20WorldCup : இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை  எதிர்கொள்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டி மழையினால் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

அதன்படி, டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று மதியம் 1.30 மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் மேக மூட்டமாக மட்டுமே காணப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 12 ஆட்டத்தின் போது மழை குறிக்கிட குறைவான வாய்ப்பு உள்ளதால் போட்டி முழுவதும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup IND vs PAK not possible to rain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->