#T20WorldCup : கட்டாய வெற்றியை நோக்கி வங்கதேசத்துடன் இந்திய அணி இன்று மோதல்.. மழையால் தடைபட வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் இந்தியா வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 2 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்விய என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில் இந்திய அணி இன்று மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் வங்கதேச அணியுடன் மோதுகிறது.

மழை குறுக்கிட வாய்ப்பு

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி இன்று போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானத்தில் 60% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலையில் தென்மேற்கு திசையில் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் இரவு 8 மணி முதல் 11 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் மாற்றம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோற்ற பிறகு இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடந்த போட்டியில் காயம் காரணமாக பாதியில் வெளியேறியுள்ள நிலையில் இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாக இந்த போட்டியில் ரிஷாப் பந்த் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த போட்டியில் விளையாடிய தீபக் கூட விற்கு பதிலாக மீண்டும் அக்சர் படேல் விளையாடுவார் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சஹால் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

டி20 உலக கோப்பையில் இதுவரை நேருக்கு நேர்

டி20 உலக கோப்பையில் இந்தியா வங்காளதேசம் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup IND vs BAN match today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->