T20 தரவரிசை பட்டியல் : இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்.! - Seithipunal
Seithipunal


டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானே பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2வது டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் எடுத்ததன் மூலம் சூரியகுமார் யாதவ் டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

அதன்படி, ஐசிசி ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் 890 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்ததாக  பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் டிவோன் கான்வே 788 புள்ளிகள் பெற்று பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் பாபர் அசாம் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், நியூசிலாந்து தொடரில் இடம் பெறாத விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 rankings Surya Kumar yadav in no 1 spot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->