விராட் கோலி தலைமையிலான அணிதான் சிறந்தது.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏகபோக பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியுடைய முன்னாள் கேப்டன் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை கொண்ட சுனில் கவாஸ்கர், விராட் கோலி தலைமையிலான அணி சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். 

இந்த பேட்டியில், " இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியின் தலைமையிலான அணியே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த அணியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வீரர்களுடைய திறமை, வெளிப்படுத்தும் விதங்கள், மன உறுதி ஆகியவற்றின் அடிப்படையில் இதனை நான் உறுதி செய்து கூறுகிறேன். 

உலகளவில் இருக்கும் எந்த ஆடுகளத்தில் வெற்றியை தரக்கூடிய பும்ரா, முகமது சமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வினின் பந்து வீச்சு போன்றவை இதற்கு உதாரணமாக கூறலாம். இவர்களுக்கு சீதோஷ்ண நிலை உதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எந்த இடத்திலும் சாதனை செய்ய இயலும். 

பேட்டிங்கை பொறுத்த வரையிலும், கடந்த 1980 ஆம் வருடத்தில் இருந்த அதே அபாரமான பலம் இருக்கிறது. இன்று விராட் கோலிக்கு கிடைத்துள்ள பவுலர்கள், அன்றைய அணியில் இல்லை. பந்துவீச்சில் பல வித்தியாசத்தை இந்தியா கொண்டுள்ளது. எந்த விதமான ஆடுகளத்தில், 20 விக்கெட்டுகளை இவர்களால் வீழ்த்த இயலும். 

கடந்த 2018 ஆம் வருட தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை சாய்த்த நேரத்திலும், ரன்கள் எடுக்க தவறியதால் தோல்வி ஏற்பட்டது. இந்த வருட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நல்ல பேட்டிங் தரவரிசை இருப்பதாக எண்ணுகிறேன். ரோஹித் பந்துகளை எதிர்கொள்ளும் விதம், எனக்குள்ளும் அவரை போலவே விளையாட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunil Gavaskar Told about Virat Kohli Indian Team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->