ஷிகர் தவானை எட்டி உதைத்து புரட்டி எடுத்த தந்தை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் தவிர மற்ற அணி வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாடுதிரும்பியுள்ளனர். இந்திய வீரர்கள் மாலத்தீவு, ஆங்காங்கே என பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீடு திரும்பிய ஷிகர் தவானை அவரது தந்தை அடித்து உதைத்துள்ளார். இந்த வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷிகர் தவானை தாக்கும் தந்தையை தடுத்தும் கேட்காமல் ஷிகர் தவானை எட்டி உதைக்கிறார். ஷிகர் தவான் அடி வாங்கிக்கொண்டு கீழே படுத்து உள்ளார்.

அவரது தந்தை எதற்காக அடித்தார் என தற்போது காரணங்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டியில் ஒழுங்காக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தோல்வியடைந்து விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டதால் கோபமடைந்து விட்டார். அதனால் தான் அடித்து உதைத்துள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தவான் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அவர் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shikhar dhawan instagram video


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->