உலகக் கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் கடினம் - முன்னாள் கேப்டன் கங்குலி.! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நேற்று ஆசிரியருடன் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பைகளை வெள்ளவே இல்லை என்ற சோக வரலாறு தொடர்ந்து கொண்டே வருகிறது.

இதனையடுத்து பிசிசிஐ மற்றும் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அணியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளால் தான் இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐபிஎல் போட்டிகளால் பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்தியன் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையை வெல்வதைவிட ஐபிஎல் கோப்பை வெல்வது மிகவும் கடினமானது. ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளுக்கு பிறகு தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் உலகக் கோப்பை தொடரில் 4 அல்லது 5 போட்டியில் வெற்றி பெற்றால் போதும் அரையிறுதிபோட்டிக்கு தகுதி பெறலாம். அதேபோல் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் 17 போட்டிகளில் விளையாட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saurav Ganguly speech about World Cup and IPL cup


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->