பாஜகவில் இணையும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி.?  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு இதுவரை Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை தூதராக கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா, கங்குலியின் நியமனம் மாநிலத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியை 2021ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜகவில் இணைவார் என பேசப்பட்டது. இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான திரிபுராவின் சுற்றுலாத்துறை தூதுவராக கங்குலி நியமிக்கப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saurav Ganguly appointed thiripura picnic ambassador


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->