மீண்டும் அதே தப்பை செய்த சஞ்சு சாம்சன்.. தோல்விக்கு இது தான் காரணம்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் வெளியேறினார். படிக்கல்  2 ரன்களில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்களிலும், அஸ்வின் 6 ரன்னுலும், டிரெண்ட் போல்ட்  11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷித் கான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். சாகா 5 ரன்னிலும், மேத்யூ வேட்  8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். சுமன் கில் பொறுப்புடன் விளையாடி 45 ரன்கள் எடுத்து எடுத்தார். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

குஜராத் அணி 18.1 முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் செய்த தவறுகள் பற்றி பார்ப்போம். இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து வெற்றி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். அப்போது பேசிய சஞ்சு சாம்சன், டாஸ்தான் வெற்றி தோல்விகளின் முக்கிய பங்காற்றுகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தால் வெற்றி பெற்று விடுகிறார்கள் என்பது போல் பேசினார். 

இதையடுத்து, குவாலிஃபையர் இரண்டு ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்து, அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போது பேசிய சஞ்சு சாம்சன் மறுபடியும் சொல்கிறேன் டாஸ்தான் வெற்றி, தோல்விகளின் முக்கிய பங்காற்றுகிறது என கூறினார். 

இறுதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல், அதாவது டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யாமல், பேட்டிங்கை தேர்வு செய்து தோல்வி அடைந்த சஞ்சு சாம்சனை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanju Samson mistakes for IPL final


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->