ஐ.பி.எல். தொடருக்கான பெங்களூர் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பெங்களூர் அணியின் புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன.

10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் 15-வது சீசனின் முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, மே 29 தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படெல் அறிவித்துள்ளார்.

இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும், Group B-யில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும், எதிர் குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 1 முறை விளையாடும். 1 அணி உடன் மட்டும் இரண்டு முறை விளையாயிடும். அதேபோல், அதே குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 2 முறை விளையாடும்.

இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் 15வது சீசனுக்கான பெங்களூர் அணியின் புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், பெங்களூர் அணியின் கேப்டனாக டூபிளஸிஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Royal challengers Bangalore introduced new jersey


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->