பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் காலம் வந்துவிட்டது.. முகமது சிராஜ்.! - Seithipunal
Seithipunal


10 அணிகள் பங்கேற்ற நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 3 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்றது. கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. அதனைத்தொடர்ந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

குவாலிஃபயர் 1

இன்று மே 24 கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

எலிமினேட்டர்

நாளை மே-25ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

குவாலிஃபயர் 2

மே 27-ம் தேதி நடைபெறும் அகமதாபாத்தில் நடைபெறும் 2வது குவாலிஃபயரில், குவாலிஃபயர் 1-ன்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்.

இறுதிப்போட்டி

மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல் குவாலிஃபயரில் வென்ற அணியும், 2வது குவாலிபயரில் வென்ற அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் பெங்களூரு அணியின் வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்ததாவது, பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்."ஆர்சிபி சிறப்பாக விளையாடி பட்டத்தை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் மூன்று முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம். ஆனால் விரைவில் பட்டத்தை வெல்வோம் என உறுதியாக நம்புகிறேன். அந்த நேரம் வந்துவிட்டது. இது போட்டியின் முக்கியமான கட்டமாகும், நாங்கள் சிறப்பாக செயல்பட தயாராக உள்ளோம் எனக்கு நல்ல சீசன் இல்லை (13 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள்). நான் என்னை ஊக்கப்படுத்துகிறேன், மேலும் பிளே ஆப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Royal challengers Bangalore definitely won IPL cup Mohamad siraj


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->