#IPL2022 : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த குயின்டன் டி காக்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை குயின்டன் டி காக் பெற்றுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற 66 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ ஜெயண்ட்ஸ் சூப்பர் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல்-குயின்டன் டி காக் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.

இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தும்சம் செய்தது. இறுதியில் லக்ன அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது.

இதில் குயின்டன் டி காக் 70 பந்துகளில் 10 பவுண்டரி 10  சிக்சர்களுடன் 140 ரன்களும், கேஎல் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை குயின்டன் டி காக் பெற்றுள்ளார். அதன்படி கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 70 பந்துகளில் 140 ரன்கள் விளாசினார். முதலிடத்தில் கிறிஸ் கேல் 175 ரன்களும், இரண்டாவது இடத்தில் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களும் அடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Quinton de kock get 3rd highest run scorer in IPL


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->