இந்திய கிரிக்கெட் அணியின், முன்னணி வீரரின் மனைவி அதிரடி கைது.! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை  தொடர் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்குகிறது. வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர், வரும் 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவரது மனைவி ஹசின் ஜஹான். 

கடந்த 2018 ஆம் ஆண்டு, ஷமி மீது ஹசின் ஜஹான் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பல பெண்களுடன் ஷமிக்கு தொடர்பு உள்ளது. கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு உள்ளது. வரதட்சணை கொடுமை உள்ளிட்ட ஏராளமான புகார்களை கூறியிருந்தார். 

பின்னர், சூதாட்டத்தில் ஷமி ஈடுபடவில்லை என்பதை BCCI உறுதிசெய்து அணியில் சேர்ந்துகொண்டது. ஷமி மீதான வழக்கு கொல்கத்தா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள ஷமி வீட்டிற்குள் ஹசின் ஜஹான் அத்துமீறி நுழைந்துள்ளார். அத்துடன், ஷமியின் தாயாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஹசின் ஜஹானை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mohammed shami wife arrested


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal