#IPL2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விலகியுள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தில் சிகிச்சை பெற்று வரும் பேர்ஸ்டோவ் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஷார்ட் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mathew short replaces Jhonny bairstow for Punjab kings


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->