வரலாற்றில் இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்.. சாதனை பட்டியலில் 2-வது இடம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 4வது நாள் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு உள்ளே இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது. நியூஸிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. 

இந்த டெஸ்ட் தொடருக்கான ஆட்டநாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது. 14 விக்கெட்களை கைப்பற்றியதுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஸ்வின் தென்ஆப்பிரிக்கா வீரர் காலிசுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் பதினொரு முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man of the series ashwin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->