#IPL2022 : இறுதிப்போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்.? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டு போட்டிகளில் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.

இவ்விரு அணிகளும் விளையாடிய லீக் சுற்றுப்போட்டியில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதவிருக்கும் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விபரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : 

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(w), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

 ராஜஸ்தான் ராயல்ஸ் : 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(w/c), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL players qualifier 2 Rajasthan royals choose to bowl


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->