ஐபிஎல் மினி ஏலம்.. டெல்லியில் இருந்து அதிரடி ஆல்ரவுண்டரை தூக்கிய கொல்கத்தா அணி.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்று (நவம்பர் 15ஆம் தேதி) அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

அதற்கான பணிகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை அந்த அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு டிரேடிங் செய்துள்ளது. அவருக்காக அந்த அணியில் இருந்து ஆல்ரவுண்டர் அமன் கானை டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. 

அதிரடி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை டெல்லி அணி கடந்த சீசனில் 10.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினர். அவர் அந்த அணிக்காக 14 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டும், 120 ரன்களும் எடுத்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction Delhi capitals trade shardul Thakur for Aman Khan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->