IPL2022 : ஐபிஎல் மெகா ஏலம் பிப்.12, 13 தேதிகளில்..590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பிப்.12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர்.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பிப்.12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Mega Auction February 12, 13


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->