#IPL2023.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிரசித் கிருஷ்ணா விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளாரான பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக சமீப காலமாக விளையாடவில்லை. குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை.

தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளதால் 2023 ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ளார். அதுமட்டுமில்லாமல் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பையிலும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து பிரசித் கிருஷ்ணா விலகி உள்ளதால், அவருக்கு பதிலாக சந்தீப் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்தீப் ஷர்மா இதற்கு முன் பஞ்சாப், ஹைதராபாத் அணிகளில் விளையாடியுள்ளார். இவர் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Rajasthan Royals Sandeep Sharma replaces prasidh Krishna


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->