சேப்பாக்கத்தில் இன்று சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதல்.. சிறப்பு மெட்ரோ ரயில்சேவை இயக்கம்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4  புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரசிகர்களின் வசதிக்காக இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு கடைசி ரயில் இயக்கப்படும். மேலும், ஐபிஎல் போட்டி முடிந்ததும் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையத்தில் இருந்து 5 முதல் 15 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 CSK vs RR match today metro train service in midnight


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->