#IPL2023 : முதலிடத்திற்கு முன்னேறுமா CSK.? இன்று சென்னை - பஞ்சாப் மோதல்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேபோல் இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

பலம் வாய்ந்த இரு அணிகள் இன்று மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 15 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 12 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 CSK vs PBKS match today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->