#IPL2023 : சிஎஸ்கே ருதுராஜ் ருத்ரதாண்டவம்.. குஜராத் அணிக்கு 179 ரன்கள் இலக்கு.. வெற்றி யாருக்கு.? - Seithipunal
Seithipunal


குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் இன்று தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகாலமாக தொடங்கியது.

இதில், இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் (4பவுண்டரி & 9 சிக்ஸர்) 92 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குஜராத் அணி களமிறங்க உள்ளது. முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 CSK 179 runs target of against Gujarat Titans


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->