இந்திய ஹாக்கியின் தலைவரானார் முன்னாள் வீரர் திலிப் ட்ரக்கி..!  - Seithipunal
Seithipunal


இன்று முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனான திலீப் டிர்க்கி இந்திய ஹாக்கி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைவர் போலாநாத் சிங் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். 

திலீப் இந்திய ஹாக்கியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வெற்றி பெற்றதை தொடர்ந்து திலீப் டிர்க்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்திய ஹாக்கி புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வேன்" என தெரிவித்துள்ளார். 

44 வயதுடைய திலீப் டிர்க்கி, 1996, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் ஹாக்கி அணிகளில் இடம்பெற்று இருந்தார். 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியிலும் திலீப் டிர்க்கி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india hocky leader dilip tricky


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->