இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது டுவிட்டரில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததால் அவர் இங்கிலாந்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India captain Rohit Sharma affected covid positive


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->