3வது ஒருநாள் போட்டி வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


வங்காளதேசம் அணிக்கு எதிரான  3வது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வங்கதேசம் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக தவான் - இஷான் கிஷான் களமிறங்கினர். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவான் எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - விராட் கோலி ஜோடி வங்கதேச பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர். இதில், 84 பந்துகளில் சதத்தை பதிவு செய்த இஷான் கிஷான் அதன்பிறகு ருத்ரதாண்டம் ஆடினார். இதன் மூலம் 129    பந்துகளில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இறுதியாக 131 பந்துகளில் 24 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் 210 ரன்கள் குவித்து டஷ்கின் அகமது பந்துவீச்சில் அவுட்டானார்.

அதன் பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 85 பந்துகளில் 72வது சதத்தை பதிவு செய்தார். இதனையடுத்து 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 450 ரன்களை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India beat by 227 runs against by Bangladesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->