இந்திய அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா.. மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ.!! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் மற்றும் கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 6, 9, 11 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகளும், 16, 18, 20 ஆகிய தேதிகளில் இருபது ஓவர் போட்டிகளும் நடைபெற உள்ளன. 

அகமதாபாத் வந்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், நெட் பவுலர் நவதீப் சைனி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய அணி பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்ற இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால், மற்ற வீரர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதனால் 18 பேர் கொண்ட இந்திய அணியில் 15 பேர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். தற்போது மாற்று வீரராக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரியவந்துள்ளது. போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதால் மாற்று வீரர்களை தயார் செய்வதில் பிசிசிஐக்கு எந்த சிக்கலும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs wi odi series mayank agarwal added


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->