இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் போட்டி.. இந்தியா பேட்டிங் தேர்வு.. கே.எல் ராகுல், முகமது ஷமி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அணியில் மாற்றம்

இன்றைய போட்டியில் இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில்லும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் விளையாடுகின்றனர்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், ஸ்டீவன் ஸ்மித் அணியை வழிநடத்துகிறார். மேலும் ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் டேவிட் வார்னருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகிய இருவரும் விளையாடுகின்றனர்.

அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி 11 வீரர்கள் :

உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித்(கே), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(வி.கீ), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், டாட் மர்பி, மேத்யூ குஹ்னேமன்

இந்திய அணி 11 வீரர்கள் :

ரோஹித் ஷர்மா (கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கீ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய அணி 64.06 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்திய அணி ஒரே ஒரு வெற்றி பெற்றால் இந்தியாவுக்கான இடம் உறுதியாகிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 3rd Test match India won the toss choose bat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->