ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா பெங்களூர் அணி.? டாஸ் வென்ற குஜராத் பேட்டிங்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 67 ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பெங்களூர் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 13 லீக் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 6 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தற்போது பெங்களூர் அணி ரன்-ரே ட்டில் பின் தங்கியுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இடம் தோல்வி கண்டால் பெங்களூரு அணி எவ்வித சிரமமுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ஐதராபாத், பஞ்சாப் அணிகள் பிளே-ஆப் வாய்ப்பை இழந்துவிடும். பெங்களூர் அணி தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூர் அணிக்கு உள்ளது.

குஜராத் அணியை பொறுத்தவரை 13 லீக் போட்டிகளில் ஆடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் தோல்வியடைந்து 20 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இன்றைய போட்டியில் குஜராத் அணி தோல்வியடைந்தாலும், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் பெங்களூர் அணியை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் இன்று குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

அணி விபரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : 

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(வி.கீ), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், சித்தார்த் கவுல், ஜோஷ் ஹேசில்வுட்

 குஜராத் டைட்டன்ஸ் : 

விருத்திமான் சாஹா(வி.கீ), சுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா(கே), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans won the toss choose to bat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->